வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (18:07 IST)

ராம் சரணுக்காக அதிரடி முடிவெடுத்த ரகுல்!

தமிழில் கவுதம் கார்த்திக் ஜோடியாக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தமிழில் வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவரது மார்க்கெட் உயர முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
இதன் பின்னர் தமிழில் கார்த்தியுடன் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது தெலுங்கில் மட்டுமின்றி, தமிழ் முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். 
 
தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத முடிவை ஒவர் எடுத்துள்ளார். அதாவது, தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார். பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். 
 
இந்த படத்தில்தான் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் பெரும்பாலும், அனைத்து படங்களில் அயிட்டம் பாடல் ஒன்று இருக்கும், இந்த மாதிரியான பாடல்களில் காஜல் அகர்வால், தமன்னா, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.