வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (18:42 IST)

விஜய் நடித்து இன்று வெளியாகியுள்ள கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் 'கோட்' திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்!

கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் காலை 7 மணி அளவில் திரையிடப்பட்டது.    
அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்தை காண திரையரங்கில் அதிகாலையிலே குவிந்துள்ளனர்.
 
பிராட்வே சினிமாஸில் காலை  7 மணிக்கும்,
பிற திரையரங்குகளில் ஒன்பது மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது
நடிகர் விஜய்யின் 68 வது படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கின்றார்.பிராட்வே திரையரங்கில் காலை 3 திரைகளில் படம் திரையிடப்பட்டது.
 
கோட் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள்  காலை 
6 மணி முதல் உற்சாகத்துடன் தங்கள் குடும்பத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புடன்
படத்திற்கு வந்தனர்.
 
அரசியல் கட்சி துவங்கப்பட்ட பின்னர் வரக்கூடிய படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருப்பதாக ரசிகர்கள்  திரைப்படத்தைக் ஆர்வமாக வந்து திரையரங்கில் குவிந்தனர்.
 
இதில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்த நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்து வந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.