வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:47 IST)

உங்களுக்கு முக்கியமான வேல ஏதோ இருக்கு போல… கோட் படத்தில் சிவகார்த்திகேயன் சீனில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன.

அதில் ஒன்றாக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் வருவது ரசிகர்களை எண்டர்டெயின் செய்துள்ளது. ஆனால் அந்த காட்சியில் இரண்டு பேசும் வசனத்தில் உள்ளர்த்தம் இருக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் மோகனைக் கைது செய்து கட்டிப் போட்டுவிட்டு இவனை நீங்க பாத்துக்கோங்க’ என சொல்வார். அப்போது சிவகார்த்திகேயன் “உங்களுக்கு இதவிட ஏதோ ஒரு முக்கியமான வேல இருக்குன்னு போறீங்க… நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என சொல்வார். இது விஜய் சினிமாவை விட்டு செல்வதால் இனிமேல் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை நிரப்பப் போவதாக பேசுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.