செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (06:35 IST)

நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ஜீவா படம்!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக வட மாநிலத்தில் உள்ள ஒரு முதல்வரின் பெயர் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளை நீக்கி விட்டால் சான்றுகள் கொடுப்பதாக தணிக்கை அதிகாரிகள் கூறிய நிலையில் அதற்கு இயக்குனர் ராஜமோகன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனை அடுத்து படக்குழுவினர் டிரிபியூனலுக்கு செல்ல முடிவு செய்தனர். டிரிபியூனலுக்கு சென்றால் குறைந்தபட்சம் தணிக்கை செய்ய மூன்று மாதங்கள் ஆகும் என்ற நிலையில் தற்போது தடைகளை உடைத்து இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் 
 
இதையடுத்து இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு பாடலில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி உள்பட ஒருசில பிரபலங்கல் நடித்து உள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது என்பது தெரிந்ததே