புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (21:55 IST)

கொரில்லா' படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி: இந்த தேதியிலாவது ரிலீஸ் ஆகுமா?

ஜீவா நடித்த 'கொரில்லா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரிரண்டு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் திடீரென பின்வாங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
'கொரில்லா' திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வீடியோ விளம்பரம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் முதலில் மே மாதமே ரிலீஸ் ஆகும் என விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 21 என விளம்பரம் செய்யப்பட்டு பின்னர் ஜூலை 5 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் இந்த படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டதால் தற்போது ஜூலை 12 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. டான் சாண்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது