திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (08:55 IST)

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் ரஜினி பாடல் – ட்ரெண்டாகும் வீடியோ

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவர்கள் சிலர் ரஜினியின் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ”அமெரிக்காஸ் காட் டேலண்ட்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. காமெடி, நடனம், பாடுதல் போன்ற பல கலைகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த சில சிறுவர்கள் தங்களது ஆடும் திறமையை வெளிக்காட்டியுள்ளனர். ரஜினிகாந்த் நடித்து ஹிட் அடித்த “பேட்ட” படத்தின் மரண மாஸ் பாடலுக்கு அவர்கள் அட்டகாசமாக ஆடியதை பார்த்து நடுவர்களே எழுந்து நின்று கைத்தட்டியுள்ளனர். தற்போது மரண மாஸ் பாடலுக்கு சிறுவர்கள் ஆடிய மாஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.