1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (19:14 IST)

காலுக்கடிகயில் ஸ்பீக்கர் - அதிரவைக்கும் சவுண்டுடன் 2.0 !

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் 4டி சவுண்டுடன் நாளை வெளியாகவுள்ளது.
 
4டி சவுண்ட் பற்றி இயக்குநர் ஷங்கர் தெரிவித்ததாவது, "இந்தக் கதையை எழுதும் போதே எப்படி 3டி-யில் வந்தால் தான் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேனோ, அதேபோல் 4டி சவுண்டில் இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் எனவும் சிந்தித்தேன்.
 
 4டி என்பது வேறொன்றுமில்லை, பொதுவாக திரையரங்குகளில் மேலே நான்கு மூலைகள், நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டு திசைகளில் ஸ்பீக்கர்கள் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ரசிகர்களின் காலுக்கு அடியில் எல்லாம் ஸ்பீக்கர்கள் இருப்பது இதுதான் முதல் முறை. 3டி-யில் 4டி சவுண்டோடு பார்க்கும் போது தான் 2.0 முழுமையான அனுபவத்தைத் தரும்" என்றார். 
 
இதை விளக்கிய சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, "சினிமாவைப் பொறுத்தவரை நிறைய ஒலி பேட்டர்ன்கள் இருக்கின்றன. இது வரை மற்றவர்கள் என்னவெல்லாம் ஒலியில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்களோ, அதைவிட ஒருபடி மேலாக 2.0-வில் நாங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். 
 
3டி-யில் படத்தையும் 4டி-யில் அதன் ஒலியையும் கேட்கும் ரசிகர்கள், படத்தில் இன்னும் ஆழமாக மூழ்கிப் போவார்கள்" என்றார். 
 
இந்த வசதி சென்னை சத்யம் திரையரங்கின் மெயின் ஸ்கீரினிலும், போரூர் ஜி.கே.சினிமாஸிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.