"2.0" படக்குழுவை வாழ்த்திய "பேட்ட" டீம் !
ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அந்த படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெருமையுடன் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் நாளை வெளிவரக் காத்திருக்கிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமிஜாக்ஸன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், 2.0 படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர். இச்செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.