சொன்ன தேதியில் வெளியாகுமா 2.0? ஷங்கருக்கு வந்த சோதனை...

Last Updated: செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:19 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரசூல் பூக்குட்டி ஒலியமைப்பு செய்திருக்கிறார், எமி ஜாக்சன் கதாநயகியாக நடித்துள்ளார். 
 
இந்நிலையில் 2.0 திரைப்படம் வரும் 29 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என கோரி மனு ஒன்று போடப்பட்டுள்ளது. அதாவது, மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு இந்திய செல்போன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 
 
அந்த புகாரில் 2.0 படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் ஆகியவற்றில் செல்போன்களை எந்த ஆதரமும் இன்றி தவறாக சித்தரித்திருப்பதாகவும், இதனால் 2.0 திரைப்படத்தின் தனிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :