மறு தணிக்கை செய்யப்படுமா ரஜினியின் '2.0?

Last Modified புதன், 28 நவம்பர் 2018 (07:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று
மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் செல்போன் குறித்து தவறாக சித்தரித்திருப்பட்டிருக்கும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளதாகவும், எனவே இந்த படம் செல்போன்கள் குறித்து பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்றும் இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.


இந்த மனுவின்மீது மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :