திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (21:21 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த்: தேவஸ்தானம் வரவேற்பு

Rajinikanth
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்ததை அடுத்து தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்பதும் குறிப்பாக அவரது திரைப்படம் வெளியாகும் போது அவர் திருப்பதிக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பளித்தனர். அதன்பிறகு அவருக்கு பிரசாதம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திருப்பதி கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அவர் நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva