1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (21:55 IST)

ரஜினியின் அடுத்த படத்தில் இருந்து சிபி நீக்கமா? பரபரப்பு தகவல்!

rajini cibi
ரஜினியின் அடுத்த படத்தில் இருந்து சிபி நீக்கமா? பரபரப்பு தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிபிசக்கரவர்த்தி கூறிய கதை ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால் இந்த படம் உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
 
எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை முடித்துவிட்டு அவர் நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர் வேறு ஒருவர் தான் என்றும் அந்த இயக்குனர்களின் பட்டியலில் லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் ரஜினியின் படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கவில்லை என்பதுதான் இப்போதைய கோலிவுட் தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva