புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:06 IST)

ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை பயணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுப்பதும் அதன் பின்னர் சில நாட்கள் இமயமலை சென்று தியானம் செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களாக இதனை அவர் கடைபிடித்து வரும் நிலையில் சமீபத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினி, கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்தார் 
 
இந்த நிலையில் இன்று அவர் இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் வரை அவர் விமானத்தில் செல்ல உள்ளதாகவும் அதன்பின் அங்கிருந்து காரில் கேதாரிநாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் ரஜினிக்கு மிகவும் பிடித்த இடமான பாபா குகையில் அவர் தியானம் செய்யவிருப்பதாகவும், சுமார் பத்து நாட்கள் இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை திரும்பியதும் நவம்பர் முதல் வாரத்தில் அவர் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளவுள்ளார். அனேகமாக ரஜினி நடிக்கும் கடைசி படம் இதுதான் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் அவர் அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்க இருப்பதாகவும் வதந்தி பரவி வருகிறது