செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (07:23 IST)

என்னை அவமானப்படுத்திய முதல் தயாரிப்பாளர்: ரஜினிகாந்தின் மலரும் நினைவுகள்

தமிழ் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் அந்த தயாரிப்பாளர் முன் இரண்டே வருடங்களில் சூப்பர் ஸ்டார் ஆகி காட்டியதாகவும் ரஜினிகாந்த் தனது மலரும் நினைவுகளை நேற்றைய தர்பாரில் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார் 
 
பாரதிராஜாவின் 16 வயதினிலே’ படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் தான் நடித்துக்கொண்டிருக்கும் போது தனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்ததாகவும் அந்த புகழின் காரணமாக தன்னை ஒரு தயாரிப்பாளர் அணுகி, தான் தயாரிக்கும் படத்தில் புக் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து அவமானப்படுத்தியதாக கூறினார்
 
அந்த அவமானத்தில் மனமுடைந்த தான் இதே கோடம்பாக்கத்தில் பெரிய ஸ்டாராக ஆகி காட்டுகிறேன் என்று மனதுக்குள் சவால் விட்டதாகவும் அந்த சவாலை இரண்டே ஆண்டுகளில் முடித்ததாகவும் கூறினார் 
 
இருப்பினும் தனது சவால் நிறைவேற தன்னுடைய உழைப்பு மட்டுமே காரணமில்லை எனவும், இயக்குனர்கள் தயாரிப்பாளர் மற்றும் தனக்கு அமைந்த கேரக்டர்களும் காரணம் என்று தன்னைத்தானே உணர்ந்ததாகும் அன்றிலிருந்து தான் தன்னுடைய உண்மையான வளர்ச்சி ஆரம்பமானது என்றும் ரஜினிகாந்த் தனது பேச்சில் கூறினார்