செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (16:43 IST)

#DarbarAudioLaunch: கொண்டாட்டத்தை துவங்கிய ரஜினி ரசிகர்கள்!!

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது.  
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் வெளியாகியது. அனிருத் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், இப்படத்தின் இசை வரும் டிச.7ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி முதல் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
 
இதற்குள் #DarbarAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.