செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (06:58 IST)

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார் 
 
தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததை தான் அறிந்து கொண்டதாகவும் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த கே பாலச்சந்தர் அவர்களும், என்னை நம்பி ஹீரோ கேரக்டர் கொடுத்த கலைஞானம் அவர்களும் வீண் போகவில்லை என்றும் கூறினார்
 
அதன் பிறகு கடந்த 40 வருடங்களில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து படங்களை தயாரித்தார்கள் என்றும் அவர்களுடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை என்றும் கூறினார் 
 
அதேபோல் ரசிகர்களாகிய நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்று அவர் மறைமுகமாக தனது அரசியல் வருகையை கூறியபோது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பதும் இந்த கரகோஷம் ஒரு சில நிமிடங்கள் கரகோஷம் தொடர்ந்து கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது