திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (11:24 IST)

அமெரிக்காவில் இருந்து வைரமுத்துவிடம் பேசிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் அமெரிக்காவிலிருந்து தன்னிடம் பேசியதாகவும் அவர் பேசும்போது அவரது குரலில் ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை இரண்டும் இருந்ததை தான் அறிந்ததாகும் கவியரசு வைரமுத்து அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் 
 
இந்த ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் அதனை பகிர்ந்து வருகின்றனர். வைரமுத்து தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: 
 
அமெரிக்காவிலிருந்து
ரஜினி அழைத்தார்.
 
மருத்துவச் சோதனை
நல்ல வண்ணம்
நடந்தது என்றார்;
மகிழ்ந்தேன்.
 
அவர் குரலில்
ஆரோக்கியம் - நம்பிக்கை
இரண்டும் இழையோடக் கண்டேன்.
 
அவரன்பர்களின்
மகிழ்ச்சிக்காகவே
இதைப்
பதிவிட்டுப் பகிர்கிறேன்.