செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (16:01 IST)

அமெரிக்கா கிளம்பிய ரஜினி... போன் போட்டு வைரமுத்து பேசியது என்ன?

மருத்துவச் சோதனைக்கு அமெரிக்கா செல்லும் ரஜினி நலம் பெற்று நாடு திரும்பும் படி கேட்டுக்கொண்டதாக வைரமுத்து ட்விட்டர் பதிவு

 
கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புகிறார். 
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவச் சோதனைக்கு அமெரிக்கா செல்லும் ரஜினி நலம் பெற்று இளமையுற்று நாடு திரும்ப வேண்டுமென்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். 'மனம் விட்டு உரையாடவும் உறவாடவும் நாம் சிலர்தானே இருக்கிறோம்' என்பது ரஜினி என்னிடம் அடிக்கடி சொல்வது. அந்தச் சிலருள் ஒருவர் சிறப்போடு வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.