1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (18:36 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

jailer
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள ஜெயிலர் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த போது இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர் 
 
ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரில் ரஜினியின் மாஸ் காட்சிகள் இருக்கும் என்றும் அது மட்டும் இன்றி, தமன்னா சிவராஜ்குமார் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களின் காட்சிகளும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மொத்தத்தில் ஜெயிலர் திரைப்படம் இன்னும் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran