1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (12:06 IST)

வேட்டையன் படப்பிடிப்பு ரத்து.. சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.. விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. அங்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்

 இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தூத்துக்குடியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அவருக்கு விஜயகாந்த் மறைவு குறித்த செய்தி கூறப்பட்டது.

இதனை அடுத்து இன்றைய படபிடிப்பை ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டு சென்னை திருப்புவதாகவும் அவர் இன்று மாலை விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva