திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (22:35 IST)

முதல்முறையாக ஒருவருக்கு ஒருவர் நன்றி தெரிவித்து கொண்ட கமல்-ரஜினி

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீடும், ரஜினியின் போயஸ் கார்டன் வீடும் கூப்பிடும் தொலைவில் இருந்தாலும் இருவரும் சந்தித்து கொள்வது மிகவும் அரிதாகவே உள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட ஒருவருக்கொருவர் கருத்துக்களை இதுவரை பரிமாறியது கிடையாது.


 


இந்த நிலையில் இன்று ஆந்திர அரசு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாக அறிவித்தது. அதில் கமல்ஹாசனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருதும், ரஜினிகாந்துக்கு 2016ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் என்.டி.ஆர் விருது பெற்ற ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கமல் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதற்கு டுவிட்டரிலேயே நன்றி கூறிய ரஜினி, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் கமல்' என்று கூறியுள்ளார். ரஜினி, கமலின் இந்த டுவீட்டுக்கள் இருவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.