புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (22:12 IST)

மேலும் ஒரு புரியாத டுவீட்: வீடியோவை வெளியிட்டு புரிய வைத்த கமல்

நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன்னர் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்தார். அந்த டுவீட் இதுதான்: என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.



 


140 எழுத்துக்கள் இருக்கும்போதே அவர் புரியும்படி பதிவு போட்டது கிடையாது. இப்போது டுவிட்டரில் 280 எழுத்துக்கள் அனுமதிப்பதால் தமிழில் புகுந்து விளையாடியுள்ளார். பெரும்பான்மையானவர்களுக்கு 'ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல்' என்பதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் தவித்தனர். இந்த நிலையில் கமல் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் 'கமல் போஸ்டரை ஒரு சிறு பையன் கத்தியால் குத்துகிறான், பின்னணியில் ஒரு குரல், அவன் இந்து மதத்திற்கு விரோதி, அவனை விடாதே' என்று கூறுகிறது. பின்னர் அந்த பையன் மீண்டும் மீண்டும் கத்தியால் போஸ்டரை குத்துகிறான். இதுகுறித்துதான் கமல் 'ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல்' என்று கூறியுள்ளார். அதேபோல் 'என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது' என்பது தமிழ் பேசியதால் மீனவர்கள் அடிபட்டத்தை குறிப்பதாக தெரிகிறது.

கமல்ஹாசனின் டுவிட்டரை புரிந்து கொள்வதற்காகவே புதிய டிக்சனரி தயாரிக்கப்பட வேண்டும் என்று இந்த டுவீட்டுக்கு பலர் கருத்து கூறி வருகின்றனர்.