செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (07:11 IST)

“விஜய் போட்டி என்று சொன்னால் எனக்கு மரியாதை இல்ல..” நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அடைமொழி யாருக்கு என ரஜினி, விஜய் இடையே போட்டி நிலவுவதாக அரசல்புரசலாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன ‘காக்கா – கழுகு’ உவமை கதை பேசுபொருளானது. இதையடுத்து நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் இதற்கு விஜய் பதில் கதை சொல்ல அதுவும் வைரலானது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற லால் சலாம் பட ஆடியோ வெளியீட்டில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது “காக்கா- கழுகு கதையை நான் விஜய்யை தாக்கி பேசியதாக பலர் நினைத்துக் கொண்டார்கள். அது எனக்கு வேதனையைத் தந்தது.  விஜய்க்கு போட்டி விஜய்தான். ரஜினிக்கு போட்டி ரஜினிதான் என நாங்கள் இருவருமே சொல்லியிருக்கிறோம்.

விஜய் என் கண் முன்னாள் வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் அவர் வீட்டில்தான் நடந்தது. அப்போது அவருக்கு 13 வயது. படித்துமுடித்த பின்னர்தான் நடிக்க வரவேண்டும் எனக் கூறினேன். அவரும் கஷ்டப்பட்டு உழைத்து இன்று பெரிய நடிகராக இருக்கிறார். நான் எனக்கு விஜய்தான் போட்டி என்று சொன்னால், அது எனக்கு மரியாதை இல்லை. அதே போல விஜய், ரஜினிதான் எனக்கு போட்டி என்று சொன்னால் அவருக்கு மரியாதை இல்லை. ரசிகர்கள் இது சம்மந்தமான மோதலை தவிர்க்கணும்” எனக் கூறியுள்ளார்.