ரஜினிக்கு அந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள் ஆகிறது!

CM| Last Updated: செவ்வாய், 29 மே 2018 (19:55 IST)
ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாது அந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள் ஆகிறது.
சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, ‘சூப்பர் ஸ்டார்’ நிலைக்கு உயர்ந்திருக்கிறார் ரஜினி. அவரை, ‘கடவுள்’ என ஒரு கூட்டம் கைகூப்பித் தொழுகிறது. அவர் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என போயஸ் கார்டன் வீட்டின் வாசலில் காத்திருக்கும் நபர்கள் ஏராளம். ‘ரஜினி எப்போது  அரசியலுக்கு வருவார்?’ என எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ரஜினி, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து நேற்றோடு 7 வருடங்கள்  ஆகின்றன. ரசிகர்களின் கண்ணீர்ப் பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும் அவர் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வந்துவிட்டார். இருந்தாலும், மே 28, 2011 என்பது ரஜினி ரசிகர்களின் வாழ்வில் ஒரு சோக நாளாகவே கருதப்படுகிறது. அந்த சோக நாளை, நேற்று வெளியான ‘காலா’ டிரெய்லர் மாற்றியிருக்கும் என்று நம்புவோம்.


இதில் மேலும் படிக்கவும் :