1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:55 IST)

ரஜினியின் முக்கிய திட்டம் திடீர் ரத்து: ரசிகர்கள் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் தமிழகமே துக்கமாக இருக்கும் நிலையில் இந்த விளம்பர நிகழ்ச்சி திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டார். ஏற்கனவே பிரசன்னா உள்பட ஒருசில நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களின் புரமோஷன்களை ரத்து செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் விளம்பர நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டபோதிலும் 'காலா' திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 'காலா' விளம்பர நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஐதராபாத் மற்றும் மும்பையில் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிரச்சி அடைந்துள்ளனர்.