1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (22:27 IST)

ராமராஜனை பார்த்து ரஜினி, கமலே பயந்தார்கள் - கே.எஸ்.ரவிக்குமார்

ராமராஜனை  பார்த்து ரஜினி, கமலே பயந்தார்கள் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், ஒரு கைதியின் டைரி, சேரன் சோழன், முத்து, ஆதவன், மின்சாரகன்னா, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
 
இவர் தற்போது சினிமாவின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில், நடிகர் ராமராஜன் நடிப்பில்  உருவாகியுள்ள சாமானியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது: ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் மாஸ் ஓபனிங் கலெக்சனை பார்த்து நமக்கு போட்டியாக முன்னாடி சென்று கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என கூறினார் என்று தெரிவித்தார்.
 
நடிகர் ராமராஜன் எங்க ஊருபாட்டுக்காரன்,  கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.