வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:08 IST)

கடனை அடைப்பதற்காக ஒன்று சேரும் ரஜினி - கமல்! - அப்டேட் கொடுத்த கார்த்தி!

Kamal Rajini

தென்னிந்திய நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து கலை நிகழ்ச்சியில் நடிக்கப்போவதாக நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் செயல்பட்டு வரும் நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை செயலாளர் பூச்சி முருகன், பொருளாளர் நடிகர் கார்த்தி, நடிகர் விஷால் உள்ளிட்ட பல திரைத்துறையை சார்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடு, கேரளாவை உலுக்கி வரும் ஹேமா அறிக்கை, தமிழ் சினிமாவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
 

 

அதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பொருளாளர் கார்த்தி, கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சி நடந்த நடிகர்கள் பலரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

நீண்ட காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் உள்ள சூழலில் இந்த அப்டேட் பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K