செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (16:04 IST)

ஹேமா கமிட்டி பத்தி எதுவும் தெரியாது..! சூர்யாவோட அன்புக்கு நன்றி! - ரஜினிகாந்த்!

rajinikanth

சூர்யாவின் கங்குவா திரைப்படம் தள்ளிப்போவது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.

 

 

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜூடன் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ள நிலையில் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் லோகேஷ்.

 

கூலி படத்தின் படப்பிடிப்பு, வேட்டையன் படத்தின் டப்பிங் என இப்போதும் பம்பரமாக சுழன்று வரும் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர் சில கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக வேட்டையன் ரிலீஸால் கங்குவா தள்ளிப்போவது குறித்து சூர்யா பேசியது குறித்து கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘சூர்யாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் என் நன்றிகள்” என கூறியுள்ளார். மேலும் மலையாள சினிமா உலகை உலுக்கியுள்ள ஹேமா அறிக்கை குறித்து கேட்டபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். சென்னையில் ஃபார்முலா ரேஸ் நடப்பது குறித்து கேட்டபோது, மகிழ்ச்சி என்றும், கார் ரேஸ் சென்று பார்க்க தனக்கு நேரமில்லை என்றும் கூறிக் கொண்டு விடை பெற்றுள்ளார்.

 

Edit by Prasanth.K