வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (14:49 IST)

கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கிய மு.க.ஸ்டாலின்!

MK Stalin

சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனிடம் வழங்கினார்.

 

 

கலைஞர் நினைவு நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கலைஞர் சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. சென்னையில் இதற்காக நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். அதை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இன்று கமல்ஹாசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு நாணயத்தை வழங்கினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. 
 

 

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K