1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (16:58 IST)

பாலிவுட் படங்களின் தோல்விக்கு என்ன காரணம்… ராஜமௌலி கருத்து!

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன.

இதனாலும் இன்ன பிற காரணங்களாலும், இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பலரும் பாலிவுட் சினிமாக்கள் தங்கள் வேர்களை பேசுவதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமௌலி “பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதிக தொகை செலவு செய்யப்படுகிறது. ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரியாமல் படத்தை எடுக்கிறார்கள். பாலிவுட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற பசி குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.