திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (18:41 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

shah rukh khan-rajini
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த  நாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின், கமல்ஹாசன், ரசிகர்கள்  உள்ளிட்டோர் பலரும் வாழ்த்துகள் தெரிவித்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதேபோல், யஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில்,  ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் பதான். இப்படம் வரும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், கூலான, எளிமையான எப்போதும் சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் சூப்பர் ஸ்டாரன ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களை விரும்புகிறேன்…நீங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj