திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (18:05 IST)

காதலன் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்ட பிரபல சீரியல் நடிகை!

சீரியல் நடிகை செண்பா, ஒரு மாத காலமாக ஐ லவ் யூ என்று சொல்லி மானஸ் பின்னால் சுற்றினேன் என ராஜா ராணி செம்பா தெரிவித்துள்ளார். பின்னர் காதலை ஏற்றதும் காதலன் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். காதலனும் இவரின் பெயரை பச்சை  குத்தி கொண்டுள்ளாராம்.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு மட்டுமில்லை, தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது. அப்படி அண்மையில் புது சீரியல் மூலம் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் நடிகை செண்பா என்கிற ஆல்யா மானசா. இவர்  அண்மையில் தன்னுடைய நடன குழு பற்றியும், சீரியல் வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தார்.
 
அப்போது தன்னுடன் பிரபல தொலைக்காட்சியில் நடன ஆடிய மானஸ் என்பவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் முதலில் செண்பாவின் காதலை நிராகரித்துள்ளார் மானஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் செண்பாவின் காதலை  புரிந்துகொண்டு மானஸ் ஏற்றுக் கொண்டாராம். தற்போது தங்களது காதலுக்கு அடையாள சின்னமாக இருவரும் தங்களது  பெயரை கையில் பச்சை குத்தியுள்ளனராம்.