வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (23:38 IST)

சூர்யா குடும்பத்தில் ஐக்கியமாகி விடுவாரா ரகுல் ப்ரித்திசிங்?

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரித்திசிங், தமிழில் சமீபத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'; படத்திலும் நடித்தார். இந்த நிலையில் சூர்யாவின் 36வது படமான 'சூர்யா 36' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

ஏற்கனவே 'சூர்யா 36' படத்தின் நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகியாக ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திலும் ரகுல் ப்ரித்திசிங்தான் ஜோடி என்று கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் சூர்யா, கார்த்தி என அண்ணன் தம்பிகளுக்கு மாறி மாறி ஜோடி போட்டு சூர்யா குடும்பத்தில் ஐக்கியமாகிவிடுவாரோ? என்று கூறப்படுகிறது

முன்னதாக விஜய் 62' படத்தில் நடிக்க ரகுல் ப்ரித்திசிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.