ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:44 IST)

அந்த விஷயத்தில் எனக்கு ரோல் மாடல் இளையராஜாதான்… ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!

ஒழுக்கத்தில் எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் இளையராஜாதான் என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்திள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.  அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ரஹ்மான் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘சமூகத்தில் இசை படிப்பதை இரண்டாவது சாய்ஸாகக் கொண்டுள்ளனர். இசைத்துறைக்குள் நுழைந்தால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் இளையராஜாதான். அவரின் ஒழுக்கத்திற்கு பிறர் கொடுக்கும் மரியாதை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது’ எனக் கூறியுள்ளார்.