வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:37 IST)

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா? அக்டோபர் மாதத்துக்குள் மேலும் 5 தடுப்பூசிகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அக்டோபர் மாதத்துக்குள் இன்னும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி; ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனி தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவை வரும் அக்டோபருக்குள் இந்தியாவுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.