செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (17:54 IST)

பேய்க்கு டாட்டா சொன்ன ராகவா லாரன்ஸ் - இந்த முறை வேற மாதிரி படம்!

ராகவா லாரன்ஸ் என்றாலே பேய்களே அலறி அடித்து ஓடிவிடும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா , காஞ்சனா 1 , காஞ்சனா  2, காஞ்சனா 3 என அடுத்தடுத்து திகில் படங்களை இயக்கி நடித்து ஆடியன்ஸை அலறவைத்த லாரன்ஸ் தற்போது தனது அடுத்த படத்தில் புது அவதாரமொன்றை எடுத்துள்ளாராம்.


 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.  ராகவா லாரன்ஸ் - சன் பிச்சர் காம்போவில் ஒரு படம் வந்தாலே நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்கனவே பதியவைத்துவிட்டனர். ஆனால் இது பேய் படம் இல்லையாம். மாறாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். 
 
எனவே கூடிய விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவற்றை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.