’பொன்னியின் செல்வன் ’ படத்தில் நடிப்பது பெருமை - பிரபல நடிகை

aiswarya rai
Last Modified புதன், 24 ஜூலை 2019 (17:20 IST)
இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரது ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் கொண்டாடுவார்கள். இந்திய சினிமா பிரபலங்கள் அவரது படத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில் நீண்ட காலமாகவே பல்வேறு இயக்குநர்கள் படமெடுக்க நினைத்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் என்ற நாவல் கதை . அமரர் கல்கியின் கை வண்ணத்தில் உருவான இந்த நாவலை மையமாகக் கொண்டு, மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கிவருகிறார். பல முன்னணி நடிகர் நடிகர்கள் இதில் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள கடிகாரக் கடை ஒன்றின் திறப்பு விழாவில்முன்னாள் உலக அழகியும் , நடிகையுமான  ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.aiswarya rai
 
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் பல ஆண்டுகளாகவே நெருக்கமாகவே தொடர்பு உள்ளது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படங்களில் நடிப்பது எப்பொழுதுமே சிறப்பான தருணம் என்று தெரிவித்தார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :