செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (08:23 IST)

என் படத்தையும் விளம்பரப்படுத்திடுங்க ப்ளீஸ்: ஆர்.ஜே பாலாஜி

சர்கார் படத்தை இலவசமாக புரோமோட் செய்தது போல என் படத்தையும் புரோமோட் செய்யுங்கள் என ஆர். ஜே பாலாஜி, அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி. அரசியல் படமான இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கின்றார். இந்த படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
 
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே, பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று கூறியிருக்கிறார்.
 
சர்கார் படத்தில் வரும் காட்சிகளில் தான் விஜய் இலவசங்களை விமர்சித்திருக்கிறார். ஆனால் எல்.கே.ஜி படத்தின் போஸ்டரிலே இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி ஆகியவை இருக்கிறது. இதுவும் அரசியல் வாதிகளை கிண்டல் பண்ணும் படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 
ஆகவே சர்கார், மெர்சல் படத்தை புரோமோட் செய்தது போல அதிமுக, பாஜகவினர் என் படத்தையும் புரோமோட் செய்யுங்கள் என  கூறியுள்ளார் பாலாஜி.