1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (17:52 IST)

சென்னை வந்து அஜித்தை சந்தித்த போனி கபூர் - அடுத்தப் படம் உறுதி

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து தனது அடுத்தப் படம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வரும் பொங்கலுக்கு படம் வெளிவரவுள்ளது.
 
இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. அதை உறுதிபடுத்தும் விதத்தில் இன்று அஜித்தை போனி கபூர் சந்தித்துள்ளார். 
 
இந்த சந்திப்பு போனிகபூரின் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.