1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (08:21 IST)

விஜய்க்கு ஏற்ற கதை வேண்டும்… பிரபல தயாரிப்பாளர் பதில்!

சூப்பர் குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அதுகுறித்து தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி பேசியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எல்லாம் சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளராக விளங்கியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பதை விடுத்து சினிமாக்களுக்கு பைனான்ஸ் மட்டுமே செய்துவந்தார்.

இந்நிலையில் அந்த நிறுவனம் தயாரிக்கும் 100 ஆவது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்குக் காரணம் விஜய்யின் முதல் வெற்றிப் படமான பூவே உனக்காக திரைப்படத்தை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ்தான்.  அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். இதற்காக விஜய் அந்த நிறுவனத்துக்கு தன் கால்ஷீட் கொடுப்பார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படம் குறித்து பேசியுள்ள ஆர் பி சௌத்ரி ‘விஜய்க்கு ஏற்றார்போல கதை அமைய வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.