1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:22 IST)

’புஷ்பா’ தமிழர்களுக்கு எதிரான படமா? மதன்கார்க்கி விளக்கம்!

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
அந்த வகையில் அல்லு அர்ஜுன் உள்பட படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அல்லு அர்ஜுன் உள்பட படக்குழுவினர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
 
அந்த வகையில் இந்த படத்தின் தமிழ் வசனத்தை எழுதிய மதன் கார்க்கி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ’செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான படம்தான் புஷ்பா என்றாலும் இந்த படம் தமிழர்களுக்கு எதிராக எதிரான படம் இல்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக இந்த படத்தில் எந்த கருத்தும் இல்லை என்றும் விளக்கமளித்தார்
 
செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மதன்கார்க்கி இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது