கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் சிம்புவின் அம்மா!
சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குப் பிறகு அவர் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. பத்து தல படம் சிம்புவின் 48 ஆவது படம் (குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட)
இதையடுத்து சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிம்புவை வைத்து படம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தவரும் தயாரிப்பாளர்களை சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் சிம்புவின் சம்பளத்தை சொல்லி ஷாக் கொடுத்து வருகிறாராம். வரும் தயாரிப்பாளர்களிடம் எல்லாம் சம்பளமாக 40 கோடி கேட்பதாக சொல்லப்படுகிறது. அதனால் வருபவர்கள் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் திரும்பிவிடுவதாக சொல்லப்படுகிறது.