திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (17:35 IST)

பிரியங்கா சோப்ரா தலையில் கண்ணாடி டம்ளரை உடைக்கும் வைரல் வீடியோ

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது தலையில் கண்ணாடி டம்ளரை உடைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
நடிகைகள் இப்போதெல்லாம் நடிகர்கள் அளவிற்கு ஒரு படத்துக்காக பணிபுரிகிறார்கள். அப்படி தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை கால்  பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள் வீடுகளில்  யாரும் முயற்சி செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு மோசமான நாளின் முடிவில், இந்த மோசமான முடிவை எடுத்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 
 
இதனால் ரசிகர்கள் மிகவும் பயத்தோடு என்ன ஆனது, ஏன் இப்படி செய்தார் என்று புலம்பி வருகின்றனர். சிலர் அது Sugar Glass என்றும் கூறப்படுகிறது.