காலண்டருக்கு அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா அசாம் சுற்றுலாத்துறை காலண்டருக்கு அரைகுறை ஆடைகளுடன் போஸ்கொடுத்ததாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்பு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹாலிவுட் திரையுலகிற்கு சென்று உலகம் முழுவதும் பிரபலமானார்.
இவர் ஆசாம் சுற்றுலா துறையின் விளம்பர தூதராக 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சுற்றுலா வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான காலண்டரில் பிரியங்கா சோப்ரா அறைகுறை ஆடைகளுடன் போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அசாம் சட்டமன்றத்தில் பிரியங்கா சோப்ராவின் காலண்டர் புகைப்படத்தை காண்பித்து, அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவரை விளம்பரத் தூதர் பொறுப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்தினர்.