புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:27 IST)

இடைவெளிக்குப் பின் மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த பிரபலம்… முதல் புகைப்படமே வெறித்தனம்!

ஒரே ஒரு காட்சியின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரியா வாரியர்.

ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.

இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளன.