திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:40 IST)

பாபநாசம் பட நடிகருக்கு திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்

பாபநாசம் பட நடிகருக்கு திருமணம்:
கொரோனா வைரஸ் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்தே பல திருமணங்கள் அமைதியாக ஆடம்பரம் இன்றி நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்களின் திருமணங்கள் கூட சுமார் 50 பேர்களுடன் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் நடந்த நடிகர் ராணா திருமணமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நடிகர் நிவின் திருமணமும் இதேபோல்தான் ஆடம்பரம் இன்றி நடந்தது
 
இந்த நிலையில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்திருந்த ரோஷன் பஷீர் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்திலும் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இருப்பினும் ரோஷன் பஷீருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களையும் பஷீர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது