திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (21:13 IST)

பாதத்தை மட்டுமே போட்டோ எடுத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!

பாதத்தை மட்டுமே போட்டோ எடுத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!
உலகில் பணம் சம்பாதிக்க லட்சக்கணக்கான வழிகள் இருக்கும் நிலையில் இளைஞர் ஒருவர் வெறும் பாதத்தை புகைப்படம் எடுத்து மாதம் ரூபாய் 3 லட்சம் சம்பாதிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த கொரோனா விடுமுறை காலத்தில் ஆன்லைன் மூலம் அனைவரும் பணம் சம்பாதிக்க கற்று கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாசன் ஸ்டாம் என்பவர் ஆண் பெண் என இருபால் இனத்தவர்களின் கால் பாதங்களை மட்டுமே புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அதிலிருந்து அவர் வருமானம் பெற்று வருகிறார் 
 
இவருடைய இன்ஸ்டா பக்கத்தை 49,000க்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தனக்கு வருமானம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் யூ ட்யூப் மற்றும் ஒன்லி ஃபிரெண்ட்ஸ் ஆகிய இணைய தளத்தில் இருந்தும் அவர் பணம் சம்பாதிக்கிறார் என்றும் வெறும் பாதங்களை மட்டுமே புகைப்படம் எடுத்து அதை பதிவு செய்து அதன் மூலம் இவர் மாதம் சராசரியாக ரூபாய் 3 லட்சம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
இதுகுறித்து அவர் கூறுகையில் ’எனக்கு பாதங்கள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உள்ளது. அதே போல் எனது ஃபாலோயர்களுக்கும் இருப்பதால்தான் என்னால் பணம் சம்பாதிக்க முடிகிறது. என்னுடைய ரசிகர்களை நான் சரியாக புரிந்து கொண்டதற்கு இந்த பாதத்தின் மேல் உள்ள மீதுள்ள ஈர்ப்பும் காதலும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்