திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (14:21 IST)

பிக்பாஸ் ஜூலியா இது....? சின்ன வயசுல என்னம்மா எப்படி இருந்திருக்க...?

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.


அந்தவகையில் கடந்த சில தினங்களாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க செய்த ஜூலியின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக தீயாக பரவி வருகிறது. இதனை கண்ட இணையவாசிகள் வித விதமா மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜூலியா இது...? என நக்கலடித்து வருகின்றனர்.