வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (12:20 IST)

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறேனா? கண் சிமிட்டி அழகி பிரியா வாரியர் பதில்

ஸ்ரீதேவியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதுபோல்  ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரெய்லர் வெளியாகி இருந்ததை கண்டு அவரது கணவர் போனிகபூர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
கண் சிமிட்டி அழகி பிரியா வாரியர் ஸ்ரீதேவி என்ற பெயரில்  இந்த படத்தில் நடித்துளளார். இதில் மது அருந்தும் அவர், சிகரெட் பிடிக்கிறார்.  ஒரு சமயத்தில் கதறி அழுகிறார். பின்னர் குளியல் தொட்டியில் இறந்த பெண்ணின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிவதுபோல் டிரெய்லர் முடிகிறது.  
 
துபாய் ஓட்டல் குளியல் அறையில் இறந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அதிர்ச்சியாகி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் போனிகபூர் வழக்கு போட்டால் சட்டப்படி சந்திப்போம் என்று ஸ்ரீதேவி பங்களா படத்தின் இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி தெரிவித்து உள்ளார். 
 
இந்த நிலையில் படம் குறித்து பிரியா வாரியர் கூறும்போது, ‘‘ஒரு பெண் சூப்பர் ஸ்டார் பற்றிய கதைதான் இந்த படம். நான் பெண் சூப்பர் ஸ்டாராக நடித்து இருக்கிறேன். இது யாருடைய கதையும் அல்ல. கற்பனை கதை. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.