அந்த பொண்ணுக்கு பெரிய இதுன்னு நெனப்பு! பிரியா வாரியரை அறிமுகம் செய்த இயக்குனர் சாடல்!

Last Updated: சனி, 16 மார்ச் 2019 (15:16 IST)
ஒரே நைட்டில் ஒபாமா ஆக போகிறேன் என வடிவேலு சொல்வது போலவே  ஒரே ஒரு பாடலில்  உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை  பிரியா வாரியர் ஒரு அடார் லவ்  என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். 
 
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய ‘ஒரு அடார் லவ்’. படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியார் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இந்நிலையில் தற்போது பிரியா வாரியரை ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்த ஓமர் லூலு  கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் புகழால், அவருக்கு ஏற்ற மாதிரி கதை அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் நிற்பந்தித்து படம் கடைசியில் ப்ளாப் ஆனாது என குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :